சந்திரிகா தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

கட்சியை வலுப்படுத்தும் உத்திகள் குறித்து இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் ஆலோசிக்கப்படவுள்ளது.

சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சந்திரிகா, கட்சியின் மறுசீரமைப்பு விடயத்தில் சில ஆலோசனைகளை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்