ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.கவிற்குள் குழப்பம் – டலஸ்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபயவிற்கு குடியுரிமை இல்லை என கூறப்படுகின்றது.

யார் என்ன சொன்னாலும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக எதிர்பார்த்தோம். அந்த வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், ஐக்கிய தேசிய கட்சிக்கு வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் நாட்டை சுற்றி வருகின்றது’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்