கோட்டாவை சந்தித்து பேசினார் ஐப்பானின் சிறப்பு தூதுவர்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார்.

கொழும்பில் நேற்று முந்தினம்(செவ்வாய்கிழமை) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.

மகிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களையும் யசூஷி அகாஷி சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்