வைத்திய சேவைகள் பாதிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 22.08.2019 அன்று காலை முதல் முழு நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 22.08.2019 அன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கென வருகை தந்த நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், வைத்தியசாலையின் தாதிமார்களுக்கும், நோயாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.

சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்