கந்தளாய் பகுதியில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிப்பு

திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பிரதேசத்தில் பேராறு,பேராற்றுவெளி மற்றும் மத்தரஸா நகர் போன்ற பகுதிகளில் சிறுவர்கள் பாடசாலைக்கோ அல்லது தனியார் வகுப்புக்களுக்கோ செல்ல முடியாது அச்சப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டாக்காலி நாய்களோடு விசர்நாய்களும் திரிவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று ஆடுகள் மற்றும் சிறு மாட்டுக் கன்றுக் குட்டிகளையும் நளாந்தம் தெருநாய்கள் கடித்து காயப்படுத்தி  வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் கட்டாக்காலி நாய்கள் அதிகமாக திரிந்தால் கிழக்கு மாகாண கால் நடைகள் திணைக்களம் நாய்களை பிடிப்பார்கள் ஆனால் இன்று கட்டாக்காலி நாய்களின் தொல்லை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்தாலும் அவர்கள் கவனிப்பது இல்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பிரதேசம் சிறு கிராம பகுதிகளை உள்ளடக்கிய பகுதி இப்பகுதியில் பாடசாலை வீட்டுச் செல்லும் சிறார்களை தெருநாய்கள் துரத்துவதாகவும் கடந்த வாரம் ஆறு வயதுடைய சிறுமியொருவரை தெருநாய் துரத்தி சிறுமி விழுந்து தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதேபோன்றுகடைக்குச் சென்ற சிறுவனையும் தெருநாய்கள் துரத்தி காயமேற்பட்ட சம்பவம் ஒன்றும் கந்தளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்