நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுகின்ற விவகாரம்

நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்போட்டியிடுகின்ற விவகாரம் தொடர்பில் நாளொரு சர்ச்சையும் பொழுதொரு குழப்பமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என நான்கு நாள்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.

புதிய பிரச்சினைகள் பற்றிய செய்திகள் இப்போது வெளிவந்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமையைத் தடைசெய்கின்ற தகுதியீனங்களில் ஒன்று தேர்தல் சட்டங்களை மீறிய குற்றமாகும். அத்தகைய ஒரு செயலுடன் கோட்டாபயவைத் தொடர்புபடுத்தி இப்போது செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இலங்கைப் பிரஜாவுரிமைச் சிக்கல்தவறான தகவல்கள் மூலம் இலங்கைக் கடவுச் சீட்டுப் பெற்றுக் கொண்டமைஇலங்கைப் பிரஜையாக இல்லாத போதும் தனது பெயரை வாக்காளர் பதிவில் பேணி, 2005
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தமை போன்ற பல்வேறு குற்றச் சாட்டுகள் அவருக்கு எதிராகப் புதிதாகக் கிளம்பியுள்ளன. அவை தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

90களின் முற்பகுதியில் இலங்கை இராணுவத்தை விட்டு விலகிய கோட்டாபய அமெரிக்கா வில் தஞ்சம் புகுந்தார். அந்த நாட்டில் முழுக்குடியுரிமை பெற்றமையை அடுத்து 2003 ஜனவரி 31 இல் அவர் தமது இலங்கைப் பிரஜாவுரிமையைத் துறந்தார்.

அதன் பின்னர் அமெரிக்கப் பிரஜையாக இலங்கைக்கு சுற்றுலாப் பயண விஸாவில் அவர் வந்து சென்றார்.

2003இல் இலங்கைப் பிரஜாவுரிமையைக் கோட்டாபய துறந்து விட்டபோதும் 2004 இலும், 2005 இலும் தமது மெதமுல்ல இல்ல முகவரியில் அவர் இலங்கை வாக்காளராகத் தனது வாக்குப் பதிவைப் பேணியுள்ளார். அச்சமயத்தில் – 2005 நவம்பரில் – தமது தமையனார் மஹிந்த ராஜபக்rவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்இலங்கைப் பிரஜையாக இல்லாத
போதும்அந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

இலங்கைப் பிரஜையாக இல்லாத போதும்வாக்காளர் பட்டியலில் தனது பெயரை அவர் பேணியமையும்வாக்களித்தமையும் தேர்தல் குற்றங்கள் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பிரஜையாக இருந்த கோட்டாபய 2005 ஜனாதி2005 ஒக்டோபர் ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுவை மஹிந்தர் தாக்கல் செய்த அன்று… அமெரிக்கப் பிரஜையான கோட்டாபயவும் அவரின் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டார்.

பதித் தேர்தலுக்கு முன்னர், 2005 செப்ரெம்பர் 4ஆம் திகதி கொழும்புக்கு வருகின்றார். ஒரு மாத கால சுற்றுலாப் பயண வீஸா அவருக்கு வழங்கப்படுகின்றது. தான் நீதிமன்றுக்கு சமர்ப்பித்த சத்தியக் கடதாசி ஒன்றில் “”எனது சகோதரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமையால் அவருக்குத் தேர்தல் பிரசாரத்தில் உதவுவதற்காக அமெரிக்காவில் இருந்து 2005 இல் நான் இலங்கை திரும்பினேன்” – என்று கோட்டாபயவே தெரிவித்திருக்கின்றார்.

சுற்றுலாப் பயணிக்கான 30 நாள் வீஸாவில் வந்த வெளிநாட்டுப் பிரஜையான கோட்டாபயநாட்டின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டமை தேர்தல் குற்றம் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 செம்ரெம்பர் 4ஆம் திகதி வந்திறங்கிய கோட்டாவுக்கு 30 நாள் சுற்றுலாப் பயணிகளுக்கான வீஸா வழங்கப்படுகின்றது.

தமையனாரின் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்ட கோட்டாபய தனது 30 நாள் வீஸா முடிவடையும் 2005 ஒக்டோபர் 4ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படுகின்றார். எங்கு தெரியுமா?

இந்தியாவுக்கு.ஒரு நாள் மட்டும் பெயருக்கு இந்தியாவில் தங்கிய அவர் அடுத்த நாள் – ஒக்ரோபர் 6ஆம் திகதி – புதிய பயணியாக இலங்கை வந்து இறங்குகின்றார். மீண்டும் அவருக்கு 30 நாள் வீஸா வழங்கப்படுகின்றது. ஆனால் அதற்குப் பிறகு வீஸா பற்றி அவர் கவலைப்படவேயில்லைப் போலும்.

ஏனென்றால் தமையனார்தானே ஜனாதிபதியாகிவிட்டாரே…!

கோட்டாபய இந்தியாவிலிருந்து திரும்பிய அடுத்தநாள் ஒக்ரோபர் 7ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார் மஹிந்தர். அந்த நிகழ்வில் இருந்து மஹிந்தரின் தேர்தல் பிரசாரத்தில் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்து கொண்டு கோட்டாபய முழு அளவில் பங்கு பற்றினார். நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்யும் நிகழ்வில் மஹிந்தருடன் கோட்டாபய நிற்கும் படம் அப்போதே ஊடகங்களில் வெளியானது.

அதன் பின்னர் கோட்டாபய இலங்கையின் பிரஜாவுரிமையை மீளப் பெற்ற விடயம் இன்னும் சுவாரசியமானது.

இலங்கையின் இரண்டாவது பிரஜாவுரிமையைப் பெறுவதற்காக விண்ணப்பித்து பல்லாயிரம் பேர் வருடக் கணக்கில் காத்திருக்கபத்து நாள்களுக்குள் கோட்டா அதனைப் பெற்றுக் கொண்ட அதிசயம் இப்போது    பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதுவும்அந்தப் பிரஜாவுரிமை வழங்கியமைக்கான சரியான ஆவணங்கள்பதிவுகள்ஒழுங்கு முறை எதுவும் இப்போதும் உரிய அலுவலகத்தில் இல்லை. அவை எவையும் இல்லாமலேயே இலங்கைப் பிரஜாவுரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதுவும்இலங்கைப் பிரஜையாக இல்லாமலேயே அவர் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவியேற்கஅவரின் நிர்வாகத்தின் கீழ் வரும் அமைப்பு அவருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியிருக்கும் விநோதம் நடந்திருக்கின்றது.

அவருக்கு 2005 இல் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டமையைத் திகதி வாரியாகப் பார்த்தால் விடயம் விளங்கும். 

*நவம்பர் 17:- ஜனாதிபதித் தேர்தல்.

நவம்பர் 18: – மஹிந்த ராஜபக்வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுகின்றது. இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கோட்டாபயவின் விண்ணப்பம் அன்றுதான் சமர்ப்பிக்கப்பட்டதாகப் பதியப்பட்டுள்ளது.

நவம்பர் 19, 20 :- சனிஞாயிறு விடுமுறை.

நவம்பர் 21 :- இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணம் செலுத்தப்படுகின்றது.

நவம்பர் 24 :- பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகக் கோட்டா நியமிக்கப்படுகின்றார்.

நவம்பர் 30 :- இரட்டைப் பிரஜாவுரிமை அன்றைய தினம் வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

டிசெம்பர் 08 :- குடிவரவுகுடியகல்வுபிரஜாவுரிமைசட்ட விரோத குடியேற்றத்தைத் தடுத்தல்நாட்டுக்குள் வெளிநாட்டவர் களின் பிரசன்னம்,இலங்கைத் தங்கல்வேலை வாய்ப்பு போன்ற வற்றைக் கட்டுப்படுத்தல் ஆகியவையும் கோட்டாவுக்குக் கீழ் வரும் துறைகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்படுகின்றன. 

– இவ்வளவும் 2005 இல் நடந்தவையாகக் கூறப்படுகின்றது.

ஆனால் இவை பற்றிய கணினிப் பதிவுகள் – அதாவது கோட்டாபயவுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கணினிப் பதிவுகள் –2014 ஜனவரி 13ஆம் திகதிதான் (வருடங்கள் கழித்து) மேற்கொள்ளப்படுகின்றன.

அவை கூட, 2018 ஏப்ரல் 11 ஆம் திகதி பெயர் விவரம் தெரியாத தரப்புகளால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.மாற்றியமைக்கப்பட முன்னர் என்ன தரவுகள்,பதிவுகள் இருந்தனஅவை எப்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் இல்லை. ஆனால் தரவுகள்பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன என்பதைக் குடியகல்வுப் பகுதிக் கணினிகள் காட்டுகின்றன.

இரட்டைப் பிரஜாவுரிமை விடயம்இலங்கை பிரஜையாக இல்லாமல் வாக்காளராகத் தன்னைப் பதிந்து வாக்களித்தமை போன்றவற்றுக்கு அப்பால் இப்போது அவர் புதிதாக இலங்கைக் கடவுச் சீட்டுப் பெற்றுக்கொண்ட முறையிலும் பெரும் குளறுபடி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

புதிய தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் அவர் புதிதாகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். பழைய அடையாள அட்டை இலக்கத்தை அவர் குறிப்பிட்டிருப்பாராயின் அவர் இரட்டைப் பிரஜாவுரிமைப்   பேர்வழி என்பதை கடவுச் சீட்டு விநியோகத்துக்கான கணினி காட்டியிருக்கும்.

ஆனால்அவர் புதிய அடையாள அட்டை இலக்கத்துடன்தாம் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர் என்று காட்டாமல் விண்ணபித்து ஓர் இலங்கைக் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டுள் ளார். அதனால் அதில் அவர் இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர் என்பது பதியப்படவில்லை. மறைக்கப்பட்டுள்ளது. அது ஒரு குற்றம் என்று கூறப்படுகின்றது.

மேலும்அவரது இந்தப் பிந்திய – புதிய – கடவுச்சீட்டில் அவரது ஆளடையாளத்தை உறுதிப் படுத்திநற்சான்றிதழ் வழங்கும் பகுதியை குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.பி.அபயக்கோன் தானே நிரப்பிஒப்பமிட்டுசான்றளித்திருக்கின்றமை வேறு.

இந்த கடவுச் சீட்டு விநியோகத்தின் நேர்மைத்தன்மையை – அதுவும் அவர் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் என்பதை மறைத்து விநியோகப்பட்டதன் உண்மைத் தன்மையை – சந்தேகமுற வைப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தனதாம் கோட்டாபய ராஜபக்rவுக்கு இன்னும் இலங்கையின் சாதாரண பிரஜாவுரிமையை வழங்கும் சான்றை அளிக்கவேயில்லை என்று கூறியுள்ள நிலையில் – கோட்டாவின் இரட்டைப் பிரஜாவுரிமையை மறைத்துஅவருக்கு சாதாரண இலங்கையருக்குரிய கடவுச் சீட்டை வழங்கியமை அல்லது அவர் பெற்றுக் கொண்டமை சட்டவிரோதமானது என்றும் கூறப்படுகின்றது.

இப்படி தனது கடவுச்சீட்டுபிரஜாவுரிமைவாக்காளர் பதிவு விடயங்களில் பல்வேறு சட்டக் சிக்கல்களை எதிர் கொண்டிருக்கும் கோட்டாபய இவற்றைத் தாண்டி இந்த ஜனாதிபதித் தேர் தலில் வேட்பாளராக நிற்பது மணலைக் கயிறாகத் திரிக்கும் வேலை போன்றுதான் தோன்றுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்