வெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்

முகவர் ஒருவர் மூலமாக கனடாவுக்கு செல்லும் நோக்கில் பயணத்தை தொடர்ந்த யாழ்ப்பாண இளைஞன் இடைவழியில் உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பரிதாகர சம்பவத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராசா பரமசிவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அவரின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் முகவர் மூலம் கனடாவுக்கு சென்று கொண்டிருந்த வேளை, இடைநடுவில் அவர் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்