இலங்கை மக்கள் வங்கியை விற்கப்போகின்றார்களா?

மக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி.சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பங்குகளை விற்பனை செய்வதாயினும் மத்திய வங்கியின் நாணயசபையின் அனுமதியைப் பெறவேண்டும்.

மக்கள் வங்கியை விற்கப்போவதாக எதிர்க்கட்சினர் மேற்கொள்ளும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை.

அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த வங்கியை மேலும் சக்தியடையச் செய்யவே இந்த திருத்தச்சட்டத்தை முன்வைத்திருக்கின்றோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்