நீராவியடிப் பிள்ளையார் விவகாரத்தில் இராணுவம் மன விரக்தியுடன் செயற்படுகிறது- சார்ள்ஸ்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்த முடியாத இராணுவத்தினர், மன விரக்தியுடன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் நிர்வாக உறுப்பினரை இராணுவம் கைது செய்துள்ளது. அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரை இராணுவத்தினர் கைது செய்தமை மன விரக்தியிலேயே ஆகும். ஏனென்றால், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்த முடியாத மன விரக்தியிலேயே இராணுவம் இவ்வாறு செயற்படுகிறது. இந்த விடயம் இராணுவத்தினால் பழிவாங்கப்படும் நடவடிக்கையாகவே இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்