வைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த 18.08.2019 அன்று பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட    பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி   சிவரூபன்  அவர்களை விடுவிக்கக் கூறி  பளைப் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

இன்று காலை பத்துமணியளவில் பளைப் பிரதேச வைத்திய சாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபவனியாக விடுதலை செய் வைத்தியரை விடுதலை செய் , நிறுத்து நிறுத்து சட்டத்தின் முன் நிறுத்து ,நீக்கு நீக்கு பயங்கரவாத சட்டத்தி நீக்கு என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பளைப் பிரதேச செயலகம் வரை வருகைதந்து    ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் பிரதேச செயலக அதிகாரியிம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் வைத்தியரை சட்டத்தின் முன் நிறுத்தாத பட்டசத்தில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர் இப் போராட்டத்தில் பளை மக்கள் அரசியல் வாதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்