ஆபத்தான முறையில் வெட்டு மரத்தை எடுத்து சென்ற கனரக வாகனசாரதி கைது

ஆபத்தான முறையில்  வெட்டு மரத்தை எடுத்து சென்ற கனரக வாகனசாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை(23) மதியம் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கல்முனை போக்குவரத்து பொலிஸார் குறித்த  பெருந்தொகையான மரங்களை ஏற்றி  சாரதியை கைது செய்துள்ளனர்.

இவ்வாகனத்தில் ஆபத்தான பொருட்களை ஏற்றிச்செல்லும் போது பாதசாரிகள் ஏனைய வாகன சாரதிகளுக்கு  எச்சரிக்கை செய்யும் விதத்தில் சிவப்பு நிறத்திலான சமிக்ஞையை காட்சிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த சாரதி ஆபத்தை விளைவிக்கூடிய வகையில் வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காகவே கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்