கோறளைப்பற்று பிரதேசத்தில் தேவபுரம் கிராமத்தில் நூலகத்திற்காக அடிக்கல் நாட்டு விழா

இன்றைய தினம் 23/8/2019 கோறளைப்பற்று பிரதேசத்தில் தேவபுரம் கிராமத்தில் நூலகத்திற்காக அடிக்கல் நாட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது.இன் நிகழ்வை தேவபுர சனசமூக நிலைய தலைவர் தே.விமல்ராஜ் அவர்களின் தலைமையிலும் மற்றும் அவ் சங்க அங்கத்தவர்களின் வழிகாட்டலிலுமே சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான திரு.சுந்தரம் சுதர்சன் சுதந்திரகட்சி மற்றும் திரு.க.கமலேஸ்வரன் தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சி சேர்ந்த இவர்கள் இருவரின் நிதி ஒதுக்கீட்டில் இவ் கட்டடத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.இவ் கட்டடத்திற்காக 2800000/- ரூபாய்கள் ஒதிக்கிடப்பட்டுள்ளது.இதன் போது முன்னால் ஒய்வுபெற்ற கோட்டகல்வி பணிமனை பணிப்பாளர் திரு.தங்கராசா அவர்களால் முதல் கல் நடப்பட்டது.இவ் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ச.றோகனதாஸ் மற்றும் பெண்களுக்கும் சிறுவருக்குமான சமாதான அமைப்பின் தலைவர் லோ.நிரோஜன் கிராம உத்தியோகத்தர் அத்தோடும் தேவபுர கிராம மக்கள் சிறுவர்கள் இளைஞர் யுவதிகள் உட்பட அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது பெண்களுக்கும்சிறுவருக்குமான சமாதான அமைப்பின் தலைவரினால் சூழலைபாதுகாப்போம் என்ற தொனிப்பொருளின் கிழ் மரங்களும் வளங்கி வைக்கப்பட்டது.

இவ் அடிக்கல் நாட்டு விழாவின் போது கோறளைபற்று சபை உறுப்பினர் இருவரும் ஒன்றினைந்து இனிவரும் காலங்களில் செயற்பட உள்ளதாகவும்.தங்கள் கிராமத்தினை அபிவிருத்தியை நோக்கிய பயணத்திற்காக பாடுபட உள்ளதாகவும் இருவரும் ஒருமித்த குரலில் உரையாற்றியதோடு உறுதி மொழியும் எடுத்து இனிதே இன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்