சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் அணிதிரளும் மக்கள் கூட்டம்

சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் நடைபெறும் பேரணியில், பெருந்திரளான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளது.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில், ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எந்ததொரு தீர்மானமும் எட்டப்படாமல் இழுப்பறி நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே சஜித்தை பெரும்பாலானோர் குறிப்பிட்டுள்ள நிலையில், அதற்கு பலம் சேர்க்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பேரணி  நடத்த அவருக்கு ஆதரவான அமைச்சர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் முதல் பேரணி, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தலையில்  பதுளையில் அண்மையில் நடத்தப்பட்டது. இதன்போது பெரும்பாலான மக்கள் அதற்கு ஆதரவை வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் சஜித்துக்கு ஆதரவு தெரிவிக்கும் இரண்டாவது பேரணி தற்போது ஆரம்பமாகவுள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்