அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய நூற்றாண்டு விழாவில் ஆனல்ட் பங்கேற்பு

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு தவநாதன் ஹரிசான்ந் தலைமையில் (22) நடைபெற்ற சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவில யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், விசேட உரை ஒன்றினையும் நிகழ்த்தினார்.

குறித்த நிகழ்வில் புதிதாக அமைக்கப்பட்ட கல்வித்தாய் சரஸ்வதியின் திருவுருவச்சிலையும் முதல்வரால் நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பட்டு பார்வைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் மற்றும் சிறார்களின் கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன், சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்