பிரி.உயர் ஸ்தானிக ஆலோசகர் ஆனோல்டை சந்தித்தார்

யாழ் மாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் AMY O BRIEN அவர்களுக்குமிடையில்  விசேட சந்திப்பு

இச் சந்திப்பு நேற்று யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இறுதியாக பதவிவகித்த முதன்மைச் செயலர் மாற்றாலாகிச் சென்ற பின்னர் புதிதாக பொறுப்பேற்ற முதன்மைச் செயலர் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக முதல்வர் அவர்களை சந்தித்தார். இச் சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன,

அதாவது அரசின் செயற்பாடுகள், நடைமுறை அரசியல், பொருளாதாரம் தொடர்பில் வினவினார். அதாவது யுத்தத்தின் பின்னரான அரசியல் நிலைகள், முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நிலை தொடர்பாக மக்களினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் கருத்துக்களை வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் அவர்கள், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார முன்னேற்றங்களாவது மிகவும் மந்தகதியிலேயேதான் உள்ளது. முன்னேற்றம் இல்லை. காரணம் என்னவென்றால் போருக்குப்பிறகு மொத்தமாக வடக்கு கிழக்கில் 90 000 ஆயிரம் பெண்தலைமைக் குடும்பம் உருவாக்கப்பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக வடக்கிலே 50 000 ஆயிரம் பெண்தலைமைக் குடும்பங்கள் உள்ளன. அவர்களுடைய வாழ்வாதாரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதார ஒழுங்கமைப்புக்கள் இது வரை மேற்கொள்ளப்படவில்லை. மேலும் அவர்களுக்கான நிலையான தொழில் முயற்சிகளுக்கான உதவிகள், திட்டங்கள் போர் முடிந்து 10 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை ஒழுங்கமைத்துக் கொடுப்படவில்லை. இவற்றுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறி மாறி ஏற்படும் அரசியல் குழப்பங்களும் காணப்படுகின்றது.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட முதல்வல் சமுர்த்தி தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார். அதாவது வடக்கிலே குறிப்பாக யாழ் மாவட்டத்திலே சமுர்த்திப் பயனாளிகள் அதிகரித்துக் காணப்படுகின்றனர். சமுர்த்திப் பயனாளிகள் அதிகரிக்கின்றார்கள் என்றால் பொருளாதார ரீதியிலே எங்களுடைய மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் அர்த்தம். சமுர்த்தி பயன்பாடு குறைந்து செல்கின்றபோதுதான் எங்களுடைய மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகின்றது என்று கூறமுடியும். ஆகவே எங்களுடைய அழிந்துபோன தொழிற்சாலைகள் புனரமைக்கப்படவேண்டும், தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும், புதிது புதிதாக பல எண்ணங்களைக் கொண்ட உற்பத்தித் திறனாய்வு தொழிற் சந்தைகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதுடன், பெண் தலைமைக்குடும்பங்களுக்கு நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய தொழில் முயற்சியை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் வாழ்வு வளம் பெறும்.

அது போன்று யுத்தத்திற்கு முன்னர் இருந்தது போன்று எமது விமான சேவைகள், கடல்வழி பயணங்கள், தமிழ் நாட்டுக்குரிய கடல் வழி பயணங்கள் மீண்டும் விஸ்தரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மக்கள் தமது ஜீவனோபாயத்தை அதன் மூலமாக சீர்செய்யக்கூடியதாக இருக்கும். நுண்கடன்களால் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறவே நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என்று கூற முடியாது. கனிசமான நிலங்களை விடுவித்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இன்னும் விடாமல் இருக்கின்ற தனியார் காணிகளை இதுவரை விடாமல் இருக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசின் சாதக பாதக நிலைமைகள் தொடர்பிலும் விளக்கினார். புதிய அரசியலமைப்பு உருவாக்குவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விளக்கப்பட்டது.

மேலும் தற்பொழுது இடம்பெறும் அபிவிருத்தி தொடர்பில் வினவியதற்கு முதல்வர் கருத்துரைக்கையில்  தற்பொழுது யாழ் மாநகர சபை எல்லைக்குற்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், விசேட திட்டங்கள், யாழ் நகர் அபிவிருத்தி, பேரூந்து நிலைய அபிவிருத்தி, யாழ் மாநகர திண்மக்கழிவகற்றல் செயற்றிட்டம், மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்;டுவரும் நடவக்கைகள் தொடர்பிலும், இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் தொடர்பிலும் முதல்வர் விளக்கமளித்திருந்தார். மேலும் அமுழ்படுத்தவுள்ள பாதாள சாக்கடைத்திட்டம் தொடர்பிலும் முதல்வர் விளக்கினார்.

இறுதியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வினவியதற்கு, போது அது தொடர்பில் மக்கள் விரும்பும் வேட்பாளரை ஆராய்ந்து, தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வை அடையும் வண்ணம் புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கு உறுதியளிக்கும் வேட்பாளரை கட்சி தலைமைப்பீடம் ஆதரவை வழங்கும். எமது தலமை சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள். அது தொடர்பில் அவசரமாக எதுவும் கூற முடியாது என்ற கருத்தை முதல்வர் பதிவு செய்தார்.
அத்துடன் புதிய இராணுவத்தளபதி நியமன் தொடர்பில் தனது கண்டனத்துடன் கூடிய கருத்தையும் முன்வைத்திருந்தார்.

இச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் திரு. ஜெயசீலன் அவர்கள், பிரதி ஆணையாளர் சீராளன் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்