நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா

யாழ்ப்பாணம்– நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குறித்த உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நல்லூர் கந்தனின் ஆசியைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது நல்லூர் கந்தனுக்கு விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

இந்த விஷேட பூஜை வழிபாடுகளின்போது பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்துக்கொண்டனர்.

வருடாந்தம் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தின் பெருந்திருவிழாவிற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்வது மற்றுமல்லாமல் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களும் கலந்து சிறப்பிக்கின்றமை வழமையாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்