தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்

பாறுக் ஷிஹான்
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை(23) அதிகாலை , திடீர் மரணமானார் .
இவ்வாறு மரணமடைந்தவர் பூண்டுலோயா – டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி . துர்கேஷ்வரன் என்பவராவார்.
 தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் – மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவர் – பல்கலைக்கழகத்திலிருந்து இன்று அதிகாலை 5 . 30 மணியளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார் .
மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை . அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்