சராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்!

ஊர்காவற்துறை தம்பாட்டி மற்றும் நாரந்தனை கிழக்கு பகுதிகளில்  21 மின்விளக்குகள் ( 30 w ) பொருத்தப்பட்டன .
ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமார் ( செல்வம் ) மற்றும் ஊர்காவற்துறை மூலக்கிளை பொருளாளர் வரதராசன் ஆகியோரின் கண்காணிப்பிலேயே இவை பொருத்தப்பட்டிருந்தன . மிகுதி 100 மின்விளக்குகள் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தின் ஏனைய பகுதிகளில் எதிவரும் தினங்களில் பொருத்தப்படும் .

தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் யாழ் மாவட்ட உப செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு ஊடாக ரூபாய் ஐந்து இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்