யாழில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம்- அலியாவலாய் கடல் பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர்

கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து, அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின்போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதியொன்றை அவர்கள் மீட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த பொதியினை சோதனைக்கு உட்படுத்தியப்போது,15 கிலோ கிராம் வெடிபொருட்கள் இருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்