பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு தாமரை தடாக அரங்கில் இன்று (சனிக்கிழமை) இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இதன்போது இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் அடங்கிய யோசனையொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளவுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவப்படுத்தும் மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்