கிளிநொச்சியில் எழுச்சி பூர்வமாக இடம்பெற்ற இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும்

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும் கிளிநொச்சி  (கடந்த ஞாயிற்றுக்கிழமை)  கூட்டுறவு சபை மண்டபத்தில் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பெருந்திரளான மக்களுடன் ஆன்மிக ஊர்வலம் மேளதாள வாத்தியம், இன்னியம் முழங்க கூட்டுறவு சபை மண்டபம் வரை இடம் பெற்றது.அதனை தொடர்ந்து காலை மாலை என இரு அமர்வுகளாக நிகழ்வுகள் இடம்பெற்றன.

காலை அமர்வுகள் குருகுல பிதா அப்புஜி வே.கதிரவேலு அரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.இறை வணக்கத்தினை க.கஜானன் அ.அபிமன் வழங்க தமிழ் வாழ்த்தினை கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் வழங்கியிருந்தனர்.அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும் பி.ஜானுயனின் வரவேற்புரையும் கிளிநொச்சி  வலய ஆசிரிய ஆலோசகர் தா.நிவேதனின் அரங்க திறப்புரையும் இடம்பெற்றன.ஆசியுரையினை சிரவை ஆதின குரு மஹா சந்நிதானம் முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் தென்கைலாய ஆதினம் தவத்திரு அகத்திய அடிகளார் கிளிநொச்சி சின்மயா மிசன் பிரமச்சர்ய சிவேந்திர சைத்தன்யர் ஆகியோரின் ஆசியுரைகள் இடம்பெற்றன.தலைமையுரையினை திருநெறிச்செம்மல் சிவ.திருக்கேதீஸ்பரனும் ஸ்தாபகர் உரையினை இலக்கியமணி சி.கணேஸ்குமாரும் வாழத்துரைகளினை ஸ்ரீ யோகிராம் சுந்தர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன்  வழங்க சிறப்புரையினை கலாநிதி  தமிழ்மணி அகளங்கன்   யாழ்.வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் சி.கணேசலிங்கம் வழங்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து உதவி விரிவுரையாளர் க.கிரிகரனின் ஆய்வுரையும் தமிழ்மாமணி தமிழருவி த.சிவகுமாரின் தலைமையில் எழுச்சி கருத்தரங்கம் முத்துஐயன் கட்டு வலதுகரை மகாவித்தியாலய ஆசிரியர் தலைமையில் கவியரங்கம்  கிளிநொச்சி வலய ஆசிரியர்களின் தமிழிசை நிகழ்வு முழங்காவில் ஆரம்ப வித்தியாலய மாணவிகளின் மயில் நடனம் திருவையாறு சிவகலை நாட்டியாலய மாணவிகளின் பக்தி நடனம் மற்றும் தமிழின் பெருமை நாட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றன. கி.வசந்தரூபன் நன்றியுரையினை தொடர்ந்து காலை அமர்வுகள் நிறைவுபெற்றன.

மாலை அமர்வுகள்  பண்டிதர் தமிழ் ஐயா வே.மகாலிங்கம் அரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை  மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்து இந்துக்கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம் என்பற்றை தொடர்ந்து அரங்கத் திறப்புரையினை திருமதி கிருபாளினி சிவமூர்த்தியும் தலைமையுரையினை ஜெ.மயூரக்குருக்களும் நிகழ்த்தியிருந்தனர்.வாழ்த்துரையினை கலாகீர்த்தி உருவை எஸ்.தில்லை நடராசாவும் மேலதிக அரசாங்க அதிபர் ந.திருலிங்கநாதன் திருமதி கலைச்செல்வி அஜிலன் நிகழ்த்த சிறப்புரையினை  தமிழ்நாடு ஸ்ரார் விஜய் தொலைக்காட்சி தெய்வீக சங்கம நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவத்தமிழ் சிரோன்மணி திருமதி சுமதிஸ்ரீ  நிகழ்த்தியிருந்தார்.

வவுனியா லலிதகலாலய மாணவிகளின் திருப்புகழ் நடனம் கிளிநொச்சி வலய ஆசிரியர்களின் காத்தவராஜன் சிந்துநடைக்கூத்து இடம்பெற்றது. சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்  சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் சான்றோர்,ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் உருவாவதற்கு முன்னின்று உழைத்தவரும் முன்னாள் இந்து நாகரித்  துறைத் தலைவருமான  பேராசிரியர் மா.வேதநாதன் வைத்தியர் ஆ.அரசக்கோன் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்களான திருமதி.சோ.செல்வராணி  திருமதி சி.பரமேஸ்வரி   ஆகியோர் சான்றோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ந.ஜீவனாவின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்