அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை குறித்து ருவான் கருத்து

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை சோதனை, கைது, தடுத்துவைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன் அவசரகால சட்டத்தை ஜனாதிபதி மைத்திரி, மாதம்தோறும் நீடிப்புச் செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் திகதி நீடிப்புச்செய்து வெளியிடப்பட்ட அவசரகால சட்ட வர்த்தமானி அறிவிப்பு நேற்றுடன் காலாவதியானது.

இந்நிலையிலேயே அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்