இராணுவத்தினரை ஆதரிக்கும் ஊடகங்களே எனக்கு களங்கம் விளைவிக்கின்றன: அடைக்கலநாதன்

இராணுவ புலனாய்வுத்துறையினரை பிரபல்யப்படுத்தும் ஊடகங்களே தனது பெயருக்கு களங்கம்  விளைவிக்கும் வகையில் தகவல் வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்

தனது பெயருக்கு களங்கம்  விளைவிக்கும் விதமாக சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக  குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இவ்விடயம் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “ பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாக என் மீது ஆதாரமற்ற செய்தியினை பகிர்ந்த சில இணையத்தளங்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.

இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இதனுடன் தொடர்புடையவர்களை இன்ரபோல் ஊடாக கைது செய்து, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இணையத்தளங்களை நடத்தும் நபர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கும் அறிவிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு, உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பும்  செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை, புலம்பெயர் நாடுகளில் இருந்து நடத்தும் பண முதலைகள், இராணுவ புலனாய்வுத்துறையினரின் கோரிக்கையில் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு வருகின்றன” என குற்றம் சுமத்தியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்