பன்னிரண்டாவது இந்துக்கோவில் உடைப்பு! மக்களோடு களத்தில் வியாழேந்திரன் எம் பி

நேற்றைய தினம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயம் இனம் தெரியாத மர்ம நபர்களால் ஆலயத்தின் சுற்று மதில்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆலயத்தின் மூலஸ்தானத்திற்கு சென்ற காடையர்கள் மனித கழிவுகளை கொண்டு ஆலயத்தின் புனிதத் தன்மை கெட்டுப்போகும் அளவிற்கு மிகவும் அருவருப்பான காட்டுமிராண்டித்தனமான வேலைகளை ஆலயத்திற்குள் நிறைவேற்றி இருந்தனர் இதேநேரம் சம்பவ இடத்தில் அல் முபாரக் ஜூம்மா பள்ளிவாயலுக்குரிய அமீக் என்னும் பெயரிடப்பட்ட பற்றிசீட்டு ஒன்று ஆலய வளாகத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது வாகனேரி கிராமமானது மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களில் ஒன்றாக காணப்படுவதோடு தொடர்ந்து மூன்றாவது தடவை இந்த ஆலயம் சேதம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களிடம் வாகனேரி மக்கள் தெரிவித்தனர்.

இந்துக்களின் ஆலயம் மட்டக்களப்பில் மாத்திரம் இந்த நல்லாட்சியின் காலத்தில் இன்று வரை 12 இந்து ஆலயங்கள் உடைத்தெரிய பட்டுள்ளதாகவும் இதனை மாவட்ட பிரதிநிதி என்ற வகையில் இந்த நாசகார மிலேச்சத்தனமான செயலைத் தாம் வண்மையாக கண்டிப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக இந்து கலாச்சார அமைச்சர் கொளரவ மனோ கணேசன் அவர்களிடம் ஓரிரு தினங்களுக்குள் எடுத்துச் செல்ல இருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் மாற்றி சமூகத்தின் வணக்கஸ்தலங்களுக்கு எதிராக இதுவரை எந்த இடையூறுகளையும் உடைப்புக்களையும் தமிழர்கள் மேற்கொள்வதில்லை எனவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கொளரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம்.

வியிழேந்திரன் தெரிவித்தார் இதேவேளை இந்த ஆலயத்தின் காணியை உரிமை கூடிக்கொண்டு முஸ்லிம் நபரொருவர் நாற்பது பேச் காணியினை தனது காணி என உரிமை கூறிக்கொண்டு சுற்றி வேலி ஒன்றையும் அமைத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆலய நிர்வாகத்திற்கும் குறித்த முஸ்லிம் நபருக்கும் இடையிலான நிலம் தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக சம்பவ தினத்திற்கு முன்தினம் ஆலயத்திற்கு கோரளைப்பற்று தெற்கு பிரதேச தவிசாளர் ஆஸ்மி அவர்கள் வருகை தந்து இதுதொடர்பான பிரச்சினையினை இரண்டு தினங்களுக்குள் தான் முடித்து தருவதாக ஆலய நிர்வாகத்திடம் கூறிக்கொண்டு சென்றிருந்தார் மேலும் ஆலயத்திற்குரிய காணியாக அரை ஏக்கர் காணி கோரளைப்பற்று தெற்கு பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டுள்ளது இதேவேளை குறித்த ஆலயமானது 1988 ஆம் ஆண்டு மே மாதம் முப்பதாம் திகதி சட்டரீதியாக இந்த ஆலயம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முதல் மரபுவழியாக தாங்கள் வழிபட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பொதுமக்களால் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஓட்டமாவடி பொலிசார் வருகை தந்தனர் இது தொடர்பான அறிக்கையினை பெற்றுக்கொண்டு மேற்கூறப்பட்ட விடையம் தொடர்பாக பொலிசார் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் மக்களும் மக்களும் சார்ந்த உடமைகளும் பாதிக்கப்படுகின்ற போது மக்களுக்கான அச்சுறுத்தல்கள் நடந்தேறுகின்ற போது இனம் தெரியாதவர்களால் நாசகார வேலைகள் அரங்கேறுகின்றபோது போலீசாரின் பாதுகாப்பினை வாகனேரி மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்