குறிஞ்சாக்கேணி பாலநிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய பொறியியலாளர் குழு விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் அண்மையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பாக ஆரம்ப கட்டமாக உரிய இடங்களை இன்று (24) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் ரன்ஞன் ஹெட்டியாராச்சி தலைமையிலான பொறியியலாளர் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்
பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெறவுள்ள இக்குறித்த கடல் மேல்பாலமானது சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது .வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் மற்றும் பெற்றோலிய வள அமைச்சினால் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
இக் களவிஜயத்தில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ,பிரதம பொறியியலாளர் திருமதி ஜேசுதாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்