மரத்துடன் மொட்டு பேச்சு

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடந்த இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் தெரிவு மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பு ஆகியவற்றில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்