சராவின் நிதியில் வேலணை விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள்!

வேலணை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை 26-08-2019 திங்கட்கிழமை மதியம் இரண்டு மணியளவில் புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அண்மையிலுள்ள தீவக கிரிக்கெட் கழகத்தின் அலுவலகத்தில் இடம்பெறும் .

தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் உபசெயலாளர் கருணாகரன் குணாளனின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் அரசுக் கட்சியின் துணைத்தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களால் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிதியம் ஊடாக ( Ridp ) ரூபாய் பத்து இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்