வவுனியாவில் கோர விபத்து – 9 பேர் படுகாயம்

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த வானொன்று குறித்த பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த 11 பேரில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்