அரசியலமைப்புக்கு முரணான பிரதமர் நியமனம் குறித்து சபாநாயகர் கருத்து

அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் நியமிக்கப்பட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என்ற செய்தியை சபாநாயகர் கரு ஜயசூரிய மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் பிரதமரின் “சட்டவிரோத நியமனம்” பற்றி குறிப்பிடப்பட்ட ஊடக அறிக்கைகள் குறித்து, சபாநாயகர் அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகள், சரியான ஆதாரங்களை மேற்கோள் காட்டாமல், ஊகங்களின் அடிப்படையிலேயே பதிவேற்றப்பட்டுள்ளன என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சரியான ஆதாரங்களுடன் குறித்த அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனவே சபாநாயகர் அதனை ஏற்க்கப்போவதில்லை என்றும் இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் தயங்கமாட்டார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு அன்று ஏற்பட்ட அதே நிலை மீண்டும் எழும் என்று தான் நம்பவில்லை என சபாநாயகர் கூறியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கை என செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்