ஐ.தே.க.வின் சில முக்கியஸ்தர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளனர் – கனக ஹேரத்

ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்த விவகாரத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி பல பிரிவுகளாக பிளவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கட்சி பிளவடையும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்வார்கள் என கனக ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமான முறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்தால் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதன் பின்னர் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்வார்கள் எனவும் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்