சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக முடிவு

பரந்துபட்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான 7 ஆம் கட்ட சுற்றுப்பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, லசந்த அலகியவண்ண மஹிந்த அமரவீரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுஜன பெரமுனவு கட்சியின் சார்பாக பசில் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்