மஹிந்தானந்தவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிறைவு

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளது.

சிறப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்தே இந்த வழக்குக் நிறைவுக்கு வந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கின் விசாரணையை முடித்த தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன, குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறப்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 53 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை பயன்படுத்தி, கரம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை முறையற்ற வகையில் விநியோகித்ததாகத் தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலீன் ருவன்ஜீவ பெர்னாண்டோவும் இரண்டாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் டிசம்பர் 31 வரை 14,000 கரம் போர்டுகளையும் 11,000 செக்கர் போர்டுகளையும் வாங்கியதாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்