இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்குச் செல்லும் பிரதான ரயில் பாதையில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக குறித்த ரயில் பாதையில் செல்லும் ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் எவரும் காயமடைய வில்லை என ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு விரைவில் குறித்த பாதையினூடாக சேவைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்