யாழ்.புத்தகத் திருவிழாவை ஆரம்பித்துவைத்தார் ஆனோல்ட்!

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் இமானுவல் ஆனோல்ட் விருந்தினராகக் கலந்து புத்தகக் கண்காட்சியைத் திறந்துவைத்தார்.

யாழில் முதன்முறை மிகப்பிரமாண்டமாய் இடம்பெறும் இந்த புத்தகக்கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்