ஜனாதிபதி தேர்தல் குறித்து எவருடனும் பேசவேண்டிய அவசியம் இல்லை- மைத்திரி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எனவே வலிந்து சென்று எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய அவசியம் தமக்கு கிடையாதென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மொட்டு உட்பட இரு கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்களென்றும் எனினும் அவர்களால் மக்கள் மத்தியில் எடுபட முடியவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வேட்பாளர் நியமனம் தொடர்பாக பாரிய யுத்தம் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக தாமே உள்ளதாகவும் அதனாலேயே தம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனைத்துக் கட்சிகளும் முன்வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தாம் யாரை ஆதரிக்க வேண்டுமென்ற தீர்மான்தை உரிய நேரத்தில் எடுப்போமென்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்