சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

கல்முனையில் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக 119 அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை நேற்று (செவ்வாய்க்கிழமை)  இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கல்முனை மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது-41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர்,  தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபவர் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்