ஐ.தே.கவின் முக்கியஸ்தர்களைச் சந்தித்தார் சஜித்!

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் கபீர் ஹசீம், முன்னாள் தவிசாளர் மலிக்சமர விக்ரம உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலந்துரையாடலின் நிறைவில் அமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய இராபோசன நிகழ்விலும் அவர்கள் கலந்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கும், மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்