சேனைக்குடியிருப்பு விபத்தில் இருவர் பலி

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்  விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து  புதன்கிழமை (28) இரவு  10.30 மணியவில் சேனைகுடியிருப்பு துரேந்தியமேடு பிரதேச வீதியில்   இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிச்சென்று மதகுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்ததை தொடர்ந்து, கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இதில் சேனைக்குடியிருப்பு காமாச்சி வீதியை  சேர்ந்த அருளானந்தம் கரன் (19) மற்றும் சேனைக்குடியிருப்பு  மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி  தனுசியன் (30) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்