பிள்ளையார் சிலையை காணவில்லை! சிங்கள மக்கள் பொலிசில் முறைப்பாடு..!

வெலிஒய நிக்கவெவ பகுதி சிங்களவர்களால் வழிபட்டு வந்த பிள்ளையார் சிலை காணாமல் போனது தொடர்பாக வெலிஒய போலீசில் இன்று (28) அவ்வூர் சிங்கள மக்கள் புகார் அளித்ததாக நிக்கவெவ தெற்கில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிக்கவெவ தெற்கு பகுதியில் உள்ள பிள்ளையார் சிலை வெகு காலத்துக்கு முன்னர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதென்றும் அச் சிலை மிக பெறுமதி வாய்ந்தது எனவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

வெலிஒய பிரதேச மக்கள் நெல் பயிரிட்ட பின்னர் முதலாவது அறுவடையை பிள்ளையாருக்காக ஒதுக்குவதாகவும் அனைத்து அறுவடைகளும் முடிந்த பின்னர் பிள்ளையாருக்காக பால் சோறு சமைத்து படையல் செய்து விழா போல கொண்டாடுவது அப்பகுதி மக்களது வழக்கமாக இருந்து வருகிறது.

சம்பந்தப்பட்ட பிள்ளையார் சிலை நேற்று முன் தினம் (27) இரவு யாரோ சிலரால் களவாடப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ள அவ்வூர் மக்கள் அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிள்ளையார் சிலை காணாமல் போன பின் அவ்வூர் மக்கள் பெரும் கவலையோடு இருப்பதாக அறியக் கிடைக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்