ஹிஸ்டரோசல்பிங்கோகிராபி பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை

குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபியினால் ஹிஸ்டரோசல்பிங்கோகிராபி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் அறிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிஸ்டரோசல்பிங்கோகிராபி பரிசோதனை மூடிய அறைக்குள் இடம்பெற்று இருக்கலாம் எனவும் அவற்றை நிரூபிக்க தங்களிடம் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் சமீபத்தில் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

அவர்கள் தாக்கல் செய்த பி அறிக்கையில், வைத்தார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 தாய்மார்களுக்கு 3 ஜூன் 2019 அன்று ஹிஸ்டரோசல்பிங்கோகிராபி பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களுக்கு (பி.எச்.டி) ஆய்வு மட்டுமே செய்யப்பட்டது என நேற்று (சனிக்கிழமை) பொலிஸ் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் மீது ஏன் பி.எச்.டி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதில் சந்தேகம் இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

அந்த மருத்துவர்கள் குறித்த தாய்மார்களை வலுக்கட்டாயமாக கருத்தடை செய்தார்களா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு 27 ஜூன் 2019 அன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த தாய்மார்களை ஹிஸ்டரோசல்பிங்கோகிராபி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் தாய்மார்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அது பாதுகாப்பாக இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதன்போது நீதிமன்றத்தில் ஆஜரான மருத்துவமனை இயக்குநரின் ஆலோசனையை நீதிமன்றம் நாடியது.

அதன்பிரகாரம் இந்த தாய்மார்கள் ஏன், எச்.எஸ்.ஜி பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது என்று நீண்ட சமர்ப்பிப்புகளை அவர் முன்வைத்தார். குறிப்பாக இது இனப்பெருக்க தொகுதியில் புற்றுநோய் ஏற்படும் என்றும் இதனால் மரணம் போன்ற மிகவும் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.

இந்த சமர்ப்பிப்புகளின் அடிப்படையில், நீதிமன்றம் சோதனைகளை நிறுத்தியதுடன் கூறப்பட்ட சிக்கல்கள் குறித்து ஒரு நிபுணர் குழுவிலிருந்து அறிக்கைகளை கோரியிருந்தது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் சாபி மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாதக் குழுவொன்றிடம் நிதியைப் பெற்று, அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை மற்றும் அந்நிதியில் சொத்துக்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட குருநாகல் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாபி யூலை மாதம் 25 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்