தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

தமிழ் தூது தனிநாயகம்  அடிகளாரின் 39ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நகர மத்தியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலையடியில் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் உப தலைவர் சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தனிநாயகம் அடிகளாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன், தமிழருவி த.சிவகுமாரன், நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், மக்கள் சேவைமாமணி நா.சேனாதிராஜா, பாலபிரசன்னா மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்