ஆலய மடப்பள்ளிக்கு நிதி ஒதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் வேம்பொடுகேனி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 0.5 மில்லியன் ரூபா நிதிக்கு புனரமைக்கப்பட்ட ஆலய மடப்பள்ளி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் காணப்படுகின்ற இந்த ஆலயம் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் பழமை வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது அத்துடன் இறுதி யுத்த காலப்பகுதியில் முன்னரங்க பகுதியாக அமைந்த இந்தப் பிரதேசத்தில் இன்னமும் மீள்குடியேற்றம் முழுமையாக இடம் பெறாத சூழலில் மக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர்  காயன் மற்றும் உறுப்பினரான கோகுல்ராஜ் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் இந்து கலாச்சார.   உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர் மற்றும் ஆலய நிர்வாகத்துடன் பக்தர்களும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்