சஜித் பொறுப்புடனும் கருத்துக்களை வெளியிட வேண்டும்: பொன்சேகா அறிவுரை

அமைச்சர் சஜித் பிரேதமதாச மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் கருத்துக்களை வெளியிடுட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது,  அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்  சஜித் பிரேமதாஸ கூறினார்.  தான் ஜனாதிபதியாக வந்தால், பெண்கள் சமூகத்தை கோடீஸ்வரர்காக மாற்றுவதுடன் ஆண்கள் பத்திரிக்கையை வாசித்து  கொண்டு  இருக்க முடியும் என்றார்.

மேலும் இந்த நாட்டில் 14 ஆயிரம் கிராமங்கள் உள்ளதாகவும் அதற்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொள்வதாக கூறினார்.

ஜனாதிபதி பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 1825 நாட்கள் ஒரு கிராமத்துக்கு சென்றால் அங்கு சுமார் இரண்டு மணித்தியாலங்களாவது இருக்க வேண்டும்.

அவ்வாறான நிலையில், 24 மணித்தியாலங்களும் கிராமம் கிராமமாக சென்றாலும் 14 ஆயிரம் கிராமங்களுக்கு செல்ல முடியுமா என்பது சந்தேகமே. ஆகையால் சிந்தித்து பொறுப்புடன் சஜித்  பேச வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்