தெனியாயவில் மண்சரிவு!

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியின் தெனியாய தோட்டத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள வீடுகளில் காணப்பட்ட பொருட்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இந்த மண் சரிவால் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதியில் தொடர்ந்தும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே தங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்