வவுனியா கிராமங்களுக்கு சார்ள்ஸ் எம்.பி. விஜயம்!

வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் விஜயம்  செய்தார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அவரை கௌரவித்தும் அவரின் வேலைத் திட்டங்களை பாராட்டியும் அவரின் உருவத்தை கையால் வரைந்த படத்தை அவரிடம் கையளித்து அவரை நெகிழ்ச்சி அடைய வைத்தனர்.

அங்கு கூடியிருந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் சேவைகளையும் வேலைத்திட்டங்களையும் பாராட்டி வாழ்த்தியதுடன் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரின் சேவை தமது பிரதேசங்களுக்கு தேவை என்பதுடன் தங்களது ஆதரவு அவருக்கு தொடர்ந்து உண்டு எனவு கூறினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்