மாநகர மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டல் முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்!

யாழ் மாநகரசபையின் உத்தியோகபூர்வ கட்டடத்தை மீள் நிர்மாணிப்பதற்காக இலங்கை அரசினால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு நிதி ஒதுக்கீட்டில் 2,350 மில்லியன் மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அமைச்சின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக இவ்வருடம் 700 மில்லியனுக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் முகமாக எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் இலங்கையின் பிரதமர், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மேல்மாகாண அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கான முன் ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று முதல்வர் இமானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை வடமாகாண அலுவலக பணிப்பாளர், அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர், பிரதி ஆணையாளர், பிரதம கணக்காளர், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் பிரதான நிகழ்விற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள், நிகழ்வின் ஒழுங்கமைப்பு, நிகழ்ச்சி நிரல், பிரதான நிகழ்வுகள், நிகழ்வின் ஒழுங்கமைப்பு, ஒழுங்குபடுத்துனர்கள் உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்