தர்மர், ஆலாலசுந்தரம் நினைவு நிகழ்வு தமிழரசு அலுவலகத்தில் அனுஷ்டிப்பு!

அரச கூலிப்படை ஒன்றினால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான அமரர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவு நிகழ்வுகள் யாழ்.மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

யாழ்.மாவட்டத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளருமாகிய பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா,வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்,  யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், நகரசபை, பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், மகளிர் அணியினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்