தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க இணக்கம் தெரிவித்தார் மைத்திரி

இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று தெரிவித்தார்.

எனினும், எப்போது? எந்த இடத்தில் சாட்சிப் பதிவு இடம்பெறும்? என்பவை குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்று பிரதி சபாநாயகர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்