ஜனாதிபதி தேர்தலுக்காக 45 மில்லியன் டொலர்களைக் கோரும் தேர்தல்கள் செயலகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரச திறைசேரியில் இருந்து சுமார் 45 மில்லியன் டொலர்களைக் தேர்தல்கள் செயலகம் கோரியுள்ளதாக அச்செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த, இந்த நிதி அச்சிடுதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சாரம் மற்றும் அஞ்சல் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்த கோரிக்கைக்கு அரச திறைசேரி அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 7 முதல் டிசம்பர் 7 ஆம் திகதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்