விநாயகபுரம் 1ம், 2ம் வீதிகள் திறப்பு!

வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் விசேட நிதி திட்டத்தில் 1.8மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட விநாயகபுரம் 1ம், 2ம் வீதிகள் கடந்த 31.08.2019 அன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா மற்றும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஆகியோரினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரதும், முன்னாள் சுகாதார அமைச்சரினதும் இணைப்புச் செயலாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன், தமிழரசுக் கட்சியின் நெளுக்குளம் வட்டார உறுப்பினர்கள், கிராம மக்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்